‘நேத்து வாங்குன அடியோட வலியே இன்னும் ஆறல’.. அதுக்குள்ள இன்னொன்னா.. கோலியை துரத்தும் சோகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படுதோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் மயன்ங் அகர்வால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மயன்ங் அகர்வால் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த பூரன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
விக்கெட் ஒரு புறம் விழுந்தாலும், கே.எல்.ராகுல் தனது நிதானமான ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்திக் கொண்டே இருந்தார். 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 132 ரன்கள் அடுத்து இந்த ஐபிஎல் சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார்.
இதனை அடுத்து 207 ரன்கள் அடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த மேட்ச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோஷ் பிலிப் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலியும் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கை கொடுப்பார் என நம்பிய ஏ பிடிவில்லியர்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் எடுத்தார்.
இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, 109 ரன்களுக்கு பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இப்போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட் (slow over-rate) கொடுத்ததற்காக கேப்டன் கோலிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.