சிஎஸ்கே ப்ளேயர்ஸா பார்த்து ‘குறி’ வைக்கும் ஆர்சிபி.. முதல்ல டு பிளசிஸ்.. இப்போ இவரையும் தூக்கிட்டாங்களே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வீரர்களை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுக்க போட்டி போடுகிறது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய பிராவோ, அம்பட்டி ராயுடு, தீபக் சஹர் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டு பிளசிஸை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. இது சிஎஸ்ஐ ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இதனை அடுத்து சிஎஸ்கே அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட்டின் பெயர் ஏலத்தில் வந்தது. உடனே சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க முயன்றது. ஆனால் 7.75 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுத்து விட்டது.
முன்னதாக தமிழகத்தை சேர்ந்தரும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக்கை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி முனைப்பு காட்டியது. ஆனால் அப்போதும் பெங்களூரு அணி போட்டி போட்டுக் கொண்டு அவரை ஏலத்தில் எடுத்தது. அதனால் சிஎஸ்கே எடுக்க நினைக்கும் வீரர்களை ஆர்சிபி குறி வைத்து எடுப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.