அஸ்வினை இந்த தடவை எந்த அணி ஏலத்துல எடுத்திருக்காங்கன்னு பாருங்க. டெல்லி கூட போட்டி போட்டு தட்டி தூக்கிய அணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் இன்று (12.02.2022) பெங்களூரில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளுடன் புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு, புதிதாக வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.
இதில் தமிழக வீரரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வினுக்கு 2 கோடி அடிப்படையாக ஏலம் விடப்பட்டது. அப்போதும் டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் அஸ்வினை எடுக்க போட்டி போட்டன. அஸ்வின் கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடி இருந்தார். அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் இந்த முறையும் அவரை தக்கவைக்க டெல்லி அணி முயற்சி செய்தது. ஆனால் ராஜஸ்தான் அணி விடாமல் போட்டி போட்டு அஸ்வினி ஏலத்தில் எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 கோடி ரூபாய் கொடுத்து அஸ்வினை ஏலத்தில் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணி அஸ்வினை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
