ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க..! அந்த வீரரை எடுக்க நீண்ட நேரம் போட்டி போட்ட இரு அணிகள்.. யாருப்பா அவரு..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் ஒரு இளம் வீரரை எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நீண்டநேரமாக போட்டி போட்டன.

ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த முறை லக்னோ, அகமதாபாத் என்ற இரு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. அதனால் மொத்தம் 10 அணிகள் வீரர்களை ஏலத்தில் எடுக்க கடுமையாக போட்டி போட்டு வருகின்றன.
அதில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்காவின் பெயர் ஏலத்தில் வந்தது. அப்போது பல அணிகள் அவரை எடுக்க போட்டி போட்டன. இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஒவ்வொரு முறையும் நீண்ட நேரமாக ஆலோசித்து ஏலம் கேட்டு வந்தது. இதனால் நீண்டு கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் 10 கோடியைத் தாண்டி ஏலம் சென்று கொண்டிருந்தது. அதனால் வேண்டாம் என பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் கேட்பதை நிறுத்திக் கொண்டது.
இதன்காரணமாக் 10.75 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது. இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
