மும்பை வீரருக்கு கொக்கி போட்ட சிஎஸ்கே.. "கடைசி'ல என்னய்யா இவ்ளோ ட்விஸ்ட் வைக்குறீங்க??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு ஆடி வந்த ஹர்திக் பாண்டியாவை, அந்த அணி நிர்வாகம், தக்க வைத்துக் கொள்ளாமல், அணியில் இருந்து வெளியேற்றியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, புதிதாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் களமிறங்கவுள்ளது.
மும்பை அணி நீக்கிய ஹர்திக் பாண்டியாவை வாங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, அவரை கேப்டன் ஆகவும் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி, முகமது ஷமி மற்றும் ஜேசன் ராய் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது. தொடர்ந்து, சில வீரரகளை அணியில் எடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் மூத்த சகோதரரான க்ருணால் பாண்டியா பெயர் ஏலத்தில் இடம்பெற்றிருந்தது. ஆரம்பத்தில், அவரை அணியில் எடுக்க சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதிக் கொண்டன. தொடர்ந்து, புதிய அணிகளான லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் போட்டி போட்டுக் கொண்டது.
இதனால், சகோதரரின் அணியில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால், இறுதியில் மற்றோரு புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், 8.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதனால், சகோதரரின் அணியில் இடம்பெற முடியாமல் போனது. ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் மும்பை அணியிலும் இணைந்து ஆடியுள்ளனர்.
அதே போல, மும்பை வீரர் க்ருணால் பாண்டியாவை அணியில் எடுக்க, சிஎஸ்கேவும் கடும் முயற்சிகளும் மேற்கொண்டது. ஆனாலும், தொகை கூடியதும் சிஎஸ்கே பின் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கேவில் விளையாட ஆசைப்பட்ட வீரரை நேக்கா தட்டி தூக்கிய கம்பீர்.. இது நம்ம லிஸ்டலயே இல்லயே..!