மறுபடியும் ‘தமிழக’ வீரர் நடராஜனை தூக்கிய SRH.. எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போயிருக்காரு தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக வீரர் நடராஜனை மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிக விலைக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த முறை லக்னோ, அகமதாபாத் என்ற இரு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. அதனால் மொத்தம் 10 அணிகள் வீரர்களை ஏலத்தில் எடுக்க கடுமையாக போட்டி போட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக வீரரான இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பெயர் எழுத்தில் வந்தது. உடனே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஏலம் கேட்க ஆரம்பித்தது. அப்போது சில அணிகளும் அவரை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன.
ஆனாலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடாப்பிடியாக நடராஜனை தொடர்ந்து ஏலத்தில் கேட்டு வந்தது. இறுதியில் 4 கோடி ரூபாய்க்கு நடராஜனை ஹைதராபாத்தில் ஏலத்தில் எடுத்தது. நடராஜன் ஏற்கனவே ஹைதராபாத் அணியில் விளையாடி உள்ளார் தற்போது மீண்டும் அந்த அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரின்போது காயம் காரணமாக பாதியிலேயே நடராஜன் விலகினார். அதனால் பல போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
