ஸ்டார் ப்ளேயரை எடுக்க போட்டி போட்ட சிஎஸ்கே.. கடைசி நேரத்தில் கொத்தாக தூக்கிச் சென்ற அணி.. ரசிகர்கள் ஏமாற்றம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் பிரபல வீரரை எடுக்க போட்டி போட்டு டெல்லி அணியிடம் சிஎஸ்கே அணி தவற விட்டது.

ஐபிஎல் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஷிகர் தவானை முதல் வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இதில் தமிழக வீரரும், இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது, அதேபோல் சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய டு பிளசிஸை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பெங்களூரு அணி அவரை தட்டிச்சென்றது.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலம் விடப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர் வேண்டும் என்பதால் டேவிட் வார்னரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி போட்டி போட்டது. 5 கோடி ரூபாய் வரை விடாமல் சிஎஸ்கே அணி ஏலம் கேட்டது. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை 6.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர் விளையாடி இருந்தார். ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனை அடுத்து அவரை அந்த அணி விடுவித்தது. அப்போது சென்னை ரசிகர்கள் பலரும் சிஎஸ்கே அணியில் விளையாட டேவிட் வார்னருக்கு அதற்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவரும் சமூகவலைத்தளங்களில் இதுகுறித்து தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை எடுத்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்
