போட்றா வெடிய.. மறுபடியும் சிஎஸ்கேவுக்கு வந்த ‘ஸ்டார்’ ப்ளேயர்.. ஃபேன்ஸ் ‘செம’ ஹேப்பி அண்ணாச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது நட்சத்திர வீரரை மீண்டும் மெகா ஐபிஎல் ஏலத்தில் எடுத்துள்ளது

ஐபிஎல் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானை முதல் வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இதில் தமிழக வீரரும், இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது, அதேபோல் சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய டு பிளசிஸை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பெங்களூரு அணி அவரை தட்டிச்சென்றது.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலம் விடப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர் வேண்டும் என்பதால் டேவிட் வார்னரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி போட்டி போட்டது. 5 கோடி ரூபாய் வரை விடாமல் சிஎஸ்கே அணி ஏலம் கேட்டது. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை 6.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பிராவோவின் பெயர் ஏலத்தில் வந்தது. உடனே சிஎஸ்கே அணி அவரை ஏலம் கேட்க தொடங்கியது. அப்போது சில அணிகள் பிராவோவை ஏலத்தில் கேட்டன. அதனால் விலை ஏற தொடங்கியது. இறுதியாக 4.40 கோடி ரூபாய்க்கும் சிஎஸ்கே அணி பிராவோவை ஏலத்தில் எடுத்தது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் பிராவோ விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
