ரசிகர்கள் லிஸ்ட்டில் இல்லாதவரை மீண்டும் சேர்த்த சிஎஸ்கே.. தோனி பிளானிங் என்னவா இருக்கும்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம், இன்று பெங்களூரில் வைத்து நடைபெற்று வருகிறது. இதுவரை, பல வீரர்களை அனைத்து அணிகளும், ஏலத்தின் மூலம் வாங்கி வரும் நிலையில், அதிகபட்சமாக இந்திய இளம் வீர ஷ்ரேயாஸ் ஐயர் 12.25 கோடி ரூபாய்க்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியிருந்தது.
அதே போல, ரபாடா, போல்ட், ஷமி உள்ளிட்ட பல பிரபல வீரர்களும் ஏலத்தில், சிறந்த விலைக்கு பல அணிகள் வாங்கியது.
இதில், மிகப் பெரிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள், முதல் சுற்றில், எந்த வீரரையும் ஏலத்தில் வாங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, முதல் வீரரை சிஎஸ்கே அணி இரண்டாவது சுற்றில் எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு, சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த ராபின் உத்தப்பாவை, 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் தற்போது வாங்கியுள்ளது. சிஎஸ்கே அணிக்காக, கடந்த சீசனில், 4 போட்டிகளில் உத்தப்பா களமிறங்கியிருந்தார்.
அதில், பிளே ஆப் மற்றும் இறுதி போட்டியில் களமிறங்கிய உத்தப்பா, இரண்டு போட்டிகளிலும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். இதனால், சிஎஸ்கே அணி சிறப்பான ரன் ஸ்கோரை எட்டி, கோப்பையையும் தட்டிச் சென்றது.
பல வீரர்களை சிஎஸ்கே குறி வைக்கும் என ஏலத்திற்கு முன்பாக, ரசிகர்கள் கணித்திருந்தனர். ஆனால், அதில் ஒரு சில வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி எடுக்க முயற்சிகள் மேற்கொண்டது. இறுதியில், அணியில் எடுக்கவுமில்லை. அப்படி இருக்க, யாரும் எதிர்பாராத வகையில், சீனியர் வீரரான ராபின் உத்தப்பாவை, சிஎஸ்கே அணி எடுத்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.