ஐபிஎல் மெகா ஏலம் : சிஎஸ்கே அணி எடுத்த முடிவு.. கடும் வேதனையில் சென்னை ரசிகர்கள்.. ஏலத்தில் நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம், தற்போது பெங்களூரில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
பல வீரர்களும், எதிர்பார்க்காத அணியில் ஏலம் போக, தங்களின் விருப்பப்பட்ட வீரர்கள், எந்த அணியில் இடம்பெறுவார்கள் என்பது பற்றியும், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த தென்னாப்பிரிக்க வீரர் பாப் டு பிளஸ்ஸிஸ், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்பாக, சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் இருந்து விடுவித்தது.
கடந்த முறை, ஐபிஎல் தொடரில், 633 ரன்கள் எடுத்த டு பிளஸ்ஸிஸ், அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில், இரண்டாம் இடம் பிடித்திருந்தார். இதனால், அவரை சிஎஸ்கே அணி தக்க வைத்துக் கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அவரை தக்க வைத்துக் கொள்ளாமல், சிஎஸ்கே அணி வெளியேற்றியது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் ஏலத்தில், டுபிளஸ்ஸிஸ் பெயர் அறிவிக்கப்பட்டது. உடனடியாக, சிஎஸ்கேவும் கோதாவில். இறங்கியது. இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, டுபிளஸ்ஸிஸை எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டது. தொகை ஏற ஏற, சென்னை அணி பின் வாங்கத் தொடங்கியது. இதனால், இறுதியில் பெங்களூர் அணி, அவரை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
சீனியர் வீரர் என்றாலும், சிஎஸ்கே அணியுடன் பாப் டு பிளஸ்ஸிஸ்க்கு உள்ள பந்தம், மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணி டு பிளெஸ்ஸிஸை எடுக்காதது, சென்னை ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.