ஓகோ.. தோனி அந்த டைம்ல தான் எல்லாத்தையும் சொல்லுவாரா..? சிஎஸ்கே சிஇஓ சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் தேர்வு குறித்து எப்போது முடிவு எடுப்பார் என்று சிஇஓ காசி விஸ்வநாதன் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் இன்று (12.02.2022) பெங்களூரில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளுடன் புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு, புதிதாக வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னையில் ஒரு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், ஏற்கெனவே சிஎஸ்கே அணியில் விளையாடிய வீரர்கள் சிலரை மீண்டும் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியில் விளையாடிய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதால் அவர்களை மீண்டும் எடுக்க அணி நிர்வாகம் ஏலத்தில் முக்கியத்துவம் அளிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கேப்டன் தோனி குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எப்பொழுதும் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தலைவன் என்ன முடிவு பண்றான்னு கடைசியில் தான் சொல்வார். இந்த இடத்தில் ஆட இவர்கள் சரியாக இருப்பார்கள் என்று ஏலம் நடக்கும்போது தனது கருத்தை சொல்வார். அதன்படி ஏலத்தில் நாங்கள் வீரர்களை எடுப்போம்’ என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிஎஸ்கே ஏற்கெனவே கேப்டன் தோனி, ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, மொயின் அலி மற்றும் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 4 வீரர்களை தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.