அவருக்கு செம டிமாண்ட்.. இந்த தடவை ரொம்ப பணத்தை ரெடியா வச்சிக்கோங்க.. சிஎஸ்கேவை அலெர்ட் பண்ணிய அஸ்வின்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணி ஐபிஎல் ஏலத்தில் ஒரு வீரரை தக்கவைக்க அதிக பணத்தை செலவிட வாய்ப்புள்ளதாக அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை.. நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா பரபரப்பு கருத்து..!
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் பிசிசிஐ மும்முரமாக செயல்பட்டு வருகிறது. வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் ஏலம் பெங்களூரில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கேப்டன் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது.
ஆனால், சிஎஸ்கே அணியின் மற்ற நட்சத்திர வீரர்களான டு பிளசிஸ், அம்பட்டி ராயுடு, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சஹர் உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணி விடுவித்தது. அதனால் இவர்கள் அனைவரும் மிக ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற அணியின் தொடக்க ஆட்டக்காரர் டு பிளசிஸ் முக்கிய காரணமாக இருந்தார். அதனால் இவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி முனைப்பு காட்டும் என இந்திய அணியின் சுழற்பந்து விச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘கடந்த முறை 1.5 கோடி ரூபாய்க்கு டு பிளசிஸை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் இந்த முறை அப்படி நடக்க வாய்ப்பு இல்லை. இப்போது டு பிளசிஸ், சிஎஸ்கே ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். அதனால் இந்தமுறை எவ்வளவு பணத்தை செலவு செய்தாவது டு பிளசிஸை எடுக்கவே சிஎஸ்கே அணி முயற்சி செய்யும். மற்ற அணிகளும் போட்டிபோடும் என்பதால் அவருக்கு பெரிய டிமாண்ட் உள்ளது’ என அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரும் ஏலத்தில் அதிக விலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார்.