'இதெல்லாம் என்ன.. வேர்ல்டு கப்ல காட்டுவார் பாருய்யா மேஜிக்'.. கோலிக்கு உலகப்புகழ் வீரர் புகழாரம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 20, 2019 05:28 PM

உலகக் கோப்பையில் இந்திய அணியின் விராட் கோலி, கட்டாயம் தனது மேஜிக்கை காட்டுவார் என்று  இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.

kohli and smith will Weave Their Magic in worldcup2019, ben stokes

மே 30-ஆம் தேதி இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நிச்சயம் தன் பேட்டிங்கால் நெய்துவிடுவார் என்றும், உலகக் கோப்பையில் ஸ்டீவ் ஸ்மித்தும் கோலியும் தங்களது அபார பேட்டிங் திறனால் பெரிய இடத்துக்கு வருவார்கள் என்றும் பென் ஸ்டோக்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் சீசன் 12 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அடுத்து  வரவிருக்கும் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி தயாராகி வருகிறது. இதனிடையே உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையைத் தவிர தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கோலிக்கும் ஸ்மித்துக்கும் எதிரான சில போட்டிகளில் விளையாண்டபோதே, இவர்களின் இலகுவான விளையாட்டுக்களில் அபரிமிதம் காட்டும் திறனைப் பார்த்து இவர்களுக்கு, தான் பெரிய ஃபேன் ஆகிவிட்டதாகவும் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். தனித்துவமான ஆட்டம் மற்றும் கிரிக்கெட்டை அர்ப்பணிப்புடனும் ஸ்டைலாகவும் விளையாடும் இவர்களின் ஆட்டத்தைக் காண, தான் எப்போது விரும்புபவன் என்றும் கூறியுள்ளார்.