"மேட்ச் ஆரம்பிச்சதும் வீரர்கள் ஒண்ணு சொன்னாங்க".. தோல்விக்கு பின் மனம்திறந்த டிராவிட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தததால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் ஹிஸ்டரிய மாத்தி எழுதுன இங்கிலாந்து..! T20WorldCup2022
சூப்பர் 12 சுற்றில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா திகழ்ந்ததால் நிச்சயம் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர்.
ஆனால், அரையிறுதி போட்டியில் எல்லாமே தலைகீழாக மாறி போனது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டுகள் எதையும் இழக்காமல், 16 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினர்.
8 வது டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நவம்பர் 13 ஆம் தேதி மோத உள்ளது. இதனிடையே, சிறந்த அணியாக இருந்த போதும் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கூட எடுக்க முடியாமல் போனதால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்தனர் .
இதனையடுத்து, போட்டிக்கு பின் இந்திய அணியின் தோல்வி குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
"இந்த தொடர் முழுவதும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால், இந்த நாள் எங்களுக்கானதாக அமையவில்லை. நாம் சில விஷயங்களை பற்றி சிந்தித்து இங்கிருந்தே அதனை மேம்படுத்த வேண்டும். அரை இறுதி போன்ற போட்டிகளில் நிறைய ரன்கள் தான் உதவும். 15 - 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் என நான் நினைக்கிறேன். 180 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் உதவி இருக்கும்.
இந்திய அணியும் அதிக ரன்கள் அடிக்க தான் முயன்றது. ஆனால் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்ததாக வீரர்கள் ஆரம்பத்திலே தெரிவித்தனர். இதன் ரன் அடிக்க தடுமாற்றம் கண்டோம். இங்கிலாந்து அணியும் சிறப்பாக பந்து வீசியது. எங்களை ரன்கள் அடிக்க விடாமல் முதல் 15 ஓவர்கள் கட்டுப்படுத்தினார்கள். கடைசி 5 ஓவர்களில் நன்றாக ரன் அடித்தோம். கடைசியில் ஹர்திக் பாண்டியா அற்புதமாக ஆடி இருந்தார்" என டிராவிட் தெரிவித்துள்ளார்.
Also Read | கும்மிருட்டில் சென்னை.. தமிழகம் முழுவதும் தட்டி வீசும் மழை.. அடுத்த 3 மணி நேரத்துக்கு இப்படித்தானாம்.!