‘அவரால இரண்டு உலகக் கோப்பை போச்சு’... இப்டி மாத்துனா தான் சரியா வரும்’... 'முன்னாள் இந்திய வீரர் காட்டம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 28, 2019 04:39 PM

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை மாற்ற வேண்டும் என, முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Robin Singh targets India head coach job, Change could be good

உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிதாக விண்ணங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ராபின் சிங்கும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

இந்நிலையில் அவர், இதுகுறித்து கூறுகையில் ‘தற்போதைய பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் தலைமையில், இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டு முறை அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் டி20 உலகக்கோப்பையிலும் தோல்வியை சந்தித்தது.

தற்போது 2023 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்யும் நேரம். அவரை மாற்றினால் அது அணிக்கு சிறந்ததாக இருக்கும். நான் பயிற்சியாளராக இருந்திருந்தால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் 4-வது இடத்திற்கு ரகானே மற்றும் அம்பதி ராயுடுவை தேர்வு செய்திருப்பேன்’ என்றார்.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #BCCI #ROBINSINGH #RAVISHASTRI #HEADCOACH