செய்தியாளர்களை சந்திக்க மறுக்கும் வீரர்?... இதுதான் காரணமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 28, 2019 03:02 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆட இந்திய அணி, அமெரிக்கா கிளம்ப உள்ளநிலையில், ரோகித் உடனான மோதல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே, கேப்டன் கோலி செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Virat to miss pre-departure press conference amidst rift rumours

உலகக் கோப்பை தொடரின் முடிவில், இந்திய அணியின் கேப்டன் கோலி - துணை கேப்டன் ரோஹித் சர்மா இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஒருநாள் அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா முயற்சி செய்ததாகவும், கோலி அதை தடுக்க தன் ஓய்வை ரத்து செய்து விட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடுவதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை, ரோகித் சர்மா அன்பாலோ செய்தார். அதற்கு பதிலடியாக அனுஷ்கா, ஒரு பதிவை போட்டு சூசகமாக ரோகித் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் மோதல் குறித்து பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், திங்கள் அன்று இந்திய அணி அமெரிக்கா கிளம்ப உள்ளது. ஒவ்வொரு வெளிநாட்டு தொடருக்கு முன்பும் நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பை சந்தித்து வரும் விராட் கோலி, இந்த முறை செய்தியாளர்களை சந்தித்துவிட்டு, கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் புறக்கணிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோகித் சர்மா உடனான மோதல் குறித்த கேள்விகளை தவிர்ப்பதற்காகவே, செய்தியாளர்கள் சந்திப்பை அவர் தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இதனை உறுதி செய்யும் வகையில் புரோ கபடி விழாவில் கலந்து கொண்ட கோலி, அங்கே முன்பபே திட்டமிடப்பட்டு இருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.