கால்பந்தைப் போல டெஸ்ட் போட்டியில் அதிரடி மாற்றம்..! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 29, 2019 06:23 PM

டெஸ்ட் போட்டிகளை சாம்பியன்ஷிப் தொடராக மாற்றி ஐசிசி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Test championships officially launched by ICC

டெஸ்ட் போட்டிகள் இதுவரை நடைபெற்ற தொடர்கள் போல் அல்லாமல் கால்பந்து போட்டிகளைப் போல் சாம்பியன்ஷிப் என்னும் புதிய முறையை ஐசிசி கொண்டு வந்துள்ளது. இதில் அனைத்து டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடுகளுடனும் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து ஐசிசி இந்த அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது.

இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 அணிகள் இடபெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் சொந்த மைதானம் மற்றும் வெளி மைதானம் என இரு தொடர்களில் விளையாட வேண்டும்.

இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ளும். இந்த போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. மொத்தம் 27 டெஸ்ட் தொடர்கள் கொண்ட இந்த சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 1 -ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடரில் இருந்து சாம்பியன்ஷிப் தொடர் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #ICC #BCCI #TEST #CHAMPIONSHIP