'அல்மோஸ்ட் கன்ஃபார்ம்தான்..'.. 'முக்கியமான துப்பு கொடுத்த முன்னாள் வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 28, 2019 05:39 PM

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு தகுதி பெறப்போகிறவர்கள் யார் என ஜூலை 30-ஆம் தேதி தெரிய வரும்.

Ravi Shastri Sealed as BCCI head Coach?, But what robin says

இந்த நிலையில், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வருவது கிட்டத்தட்ட உறுதியாகி, இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 1997 முதல் 1999 வரை பயிற்சியாளராக இருந்தவரும், தற்போதைய பிசிசிஐ அலுவலருமான அனுஷ்மான் சூசகமாக சொல்லியிருக்கிறார்.

உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்ததோடு, பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, ரவி சாஸ்திரி, இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் இன்னும் சிலர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதே சமயம், ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிதான், உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்று தோல்வியுற்றதாகவும், 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல வேண்டும் என்றால், ஒரு மாற்றம் வேண்டும் என்றும் ராபின் சிங் கூறியுள்ளார். ராபின் சிங்கின் இந்த கருத்து கிரிக்கெட் உலகத்தில் சலனத்தை உண்டுபண்ணியுள்ளது.

Tags : #BCCI #RAVISHASTRI #ROBIN SINGH