"நாளைக்கு என்னோட முதல் மேட்ச்ன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு தூங்க போனேன்.. காலைல அவங்க உயிரோட இல்ல".. கண்கலங்கிய பாக். கிரிக்கெட் வீரர் நசீம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தனது தாயின் மறைவு குறித்து மனம் திறந்திருக்கிறார்.
Also Reads | "கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்".. அதுக்கு அவங்க சொன்ன காரணம் தான்.. வைரல் பின்னணி..!
பாகிஸ்தானின் நட்சத்திர இளம் வீரர் நசீம் ஷா மாடர்ன் கிரிக்கெட்டில் மிகவும் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 2019 இல் பாகிஸ்தானுக்காக தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நசீம், அனைத்து ஃபார்மட்களிலும் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்துவருகிறார். அவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 14 டெஸ்ட் மற்றும் 16 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் சமீபத்தில் முடிவடைந்த T20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
இந்நிலையில், மறைந்த தனது தாய் குறித்து உருக்கத்துடன் பேசியிருக்கிறார் நசீம். முதல் சர்வதேச போட்டியில் அவர் விளையாட இருந்த அன்று அவரது தாய் மரணமடைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"நான் என் அம்மாவுடன் எப்போதும் இணக்கமாக இருந்தேன். எனக்கு 12 வயதாக இருந்தபோது, கிரிக்கெட் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினேன். நான் லாகூருக்கு குடிபெயர்ந்தேன். என் முதல் மேட்ச் வந்ததும், ஒரு நாள் முன்பு அம்மா என்னை அழைத்தார்.
அப்போது 'நாளை என் முதல் மேட்ச்' என்று சொன்னேன். அவர் டிவி பார்ப்பது இல்லை. அவருக்கு கிரிக்கெட் தெரியாது. ஆனால் நான் அவரிடம் சொன்னேன், 'நாளை விளையாட்டை நீங்கள் பார்க்க வேண்டும். ஏனென்றால் நான் விளையாடுகிறேன். நான் டிவியில் நேரலையில் இருப்பேன் என்றேன். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். விளையாட்டைப் பார்க்க லாகூர் வருவேன் என்று சொன்னார். அடுத்தநாள் நான் கண்விழித்ததும், அணி நிர்வாக அதிகாரிகள் என்னிடம் வந்து, 'அம்மா இறந்துவிட்டார்' என்றார்கள்" என கலங்கிய கண்களுடன் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர்,"அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்கள், நான் மிகவும் கஷ்டப்பட்டேன். உங்களுக்குள் என்ன நடக்கிறது என்று யாரும் யோசிப்பதில்லை. நான் நிறைய மருந்துகள் வைத்திருந்தேன். எங்கு பார்த்தாலும் என் அம்மாவின் முகமே தெரிந்தது. நான் அவரை பற்றி நிறைய யோசித்தேன். எனது முதல் போட்டி அத்தனை வலிகளுக்கு இடையே தான் நடைபெற்றது. சில இக்கட்டான நேரத்தில் எல்லாம் அந்த நாளை நினைத்துப்பார்ப்பேன். அத்தனை பெரிய வலியை கடந்துவந்த நம்மால் சாதிக்க முடியும் என எனக்குள் தோன்றும்" என உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.
Also Read | ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு..!