"உங்க திறமைக்கு இந்தியா 'டீம்'ல இடம் இல்லையா??... அப்போ வேற நாட்டுக்காக ஆடுங்க..." இதென்னடா இந்தியன் 'டீம்'க்கு வந்த 'சோதனை'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாதது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 3 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ், இதுவரை ஒருமுறை கூட சர்வதேச அணிக்காக ஆடியதில்லை. இந்நிலையில், நேற்றைய போட்டியில் பெங்களூர் அணிக்காக அதிரடியாக ஆடிய சூர்யகுமார், அணியை வெற்றி பெறச் செய்தார்.
தன்னைத் தொடர்ந்து அணியில் தேர்வு செய்யாததால் பிசிசிஐ-க்கு சூர்யகுமார் யாதவ் கொடுத்த பதிலடி தான் இது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அதில், 'இந்திய சர்வதேச அணியில் சூர்யகுமாருக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் அவர் வேறு நாடுகளுக்கு சென்று மற்ற நாடுகளுக்கான சர்வதேச அணிகளில் ஆட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். அதே போல நியூசிலாந்து அணிக்காக அவர் ஆட வேண்டும் என்பதையும் மறைமுகமாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
I wonder if Suryakumar Yadav fancies playing International cricket he might move overseas #CoughNZCough
— Scott Styris (@scottbstyris) October 28, 2020
இந்திய அணி வீரர் ஒருவருக்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்து மற்ற நாட்டிலுள்ள அணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருவது பிசிசிஐ-யின் தேர்வுக் குழு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.