'உனக்கு இப்படி ஒரு காதலனா'... 'ரூம் சாவியை அக்காவிடம் கொடுத்துவிட்டு சென்ற இளம்பெண்'... திரும்பி வந்ததும் கண்ட மோசமான காட்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Oct 29, 2020 11:58 AM

தனது சொந்த சகோதரியிடம் தனது அறையின் சாவியைக் கொடுத்து விட்டுச் சென்ற இளம்பெண் திரும்பி வந்து பார்த்தபோது கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

College student discovering dozens of water bottles filled with URINE

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் Colleen Cameron. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் உனது அறையின் சாவியைக் கொடு என அவரது சகோதரி கேட்டுள்ளார். இவரும் தனது சகோதரி தானே என அவரது அறையின் சாவியைக் கொடுத்து விட்டு கல்லூரிக்குச் சென்றுள்ளார். பின்னர் கல்லூரி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது அறை முழுவதும் ஒரே குப்பையாகக் கிடந்துள்ளது. இதனால் கடும் டென்ஷனான அவர் அறையைச் சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளார்.

College student discovering dozens of water bottles filled with URINE

அப்போது கட்டிலின் கீழே சுத்தம் செய்தபோது நிறைய பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடந்துள்ளது. அதை என்னவென திறந்து பார்த்த போது அதில் சிறுநீர் நிரப்பப்பட்டிருந்தது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர், என்ன நடந்தது எனத் தனது சகோதரியிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் தனது காதலன் இங்கு வந்ததாகவும், சிறுநீர் கழிக்கச் சோம்பேறித்தனம் பட்டு அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

College student discovering dozens of water bottles filled with URINE

இதையடுத்து  Colleen தனக்கு நடந்ததையும், அவர் அந்த அறையைச் சுத்தம் செய்ததையும் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அதைப் பார்த்த பலரும் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பலரும் உங்கள் சகோதரியிடம் அந்த நபருடனான உறவைத் துண்டிக்கச் சொல்லுங்கள் எனப் பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #BEDROOM

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. College student discovering dozens of water bottles filled with URINE | World News.