"இவர என்ன தாங்க பண்றது??.." 'பழைய' பகையை மீண்டும் தோண்டிய முன்னாள் 'வீரர்'... புதிதாக எழுந்த 'சர்ச்சை'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இருந்து கடும் மோதல் இருந்து வந்தது.

முந்தைய சீசனில் சில ஐபிஎல் போட்டிகளில் ஜடேஜாவுக்கு அணியில் இடம் கிடைக்காத நிலையில், மஞ்ச்ரேக்கர் அவரை முழுமையான கிரிக்கெட் வீரர் இல்லை என தெரிவித்திருந்தார். இது மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பதிலடி தரும் வகையில், ஜடேஜாவும் நேரடியாக மஞ்ச்ரேக்கரை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மஞ்சரேக்கரின் வர்ணனையாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஜடேஜாவை சீண்டும் வகையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்காக இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரை வைத்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும், சில வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். அப்போது, 'டி20 அணிக்கு ஜடேஜா தேவையில்லை . அவருக்கு பதிலாக அக்சர் படேலை அணியில் எடுத்திருக்கலாம்' என ட்விட்டரில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 'நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
completely agree. https://t.co/osH78wATdm
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) October 27, 2020
ஏற்கனவே கடந்த ஆண்டு சஞ்சய் மஞ்சரேக்கர் - ஜடேஜா மோதல் பல்வேறு பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஜடேஜா சிறந்த முறையில் பேட்டிங் செய்து வருகிறார். பவுலிங்கில் சற்று சுமாராக வீசி வருவதால் தான் ஜடேஜா மீது இந்த விமர்சனம் எழுந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் வேண்டுமென்றே ஜடேஜா குறித்து பதிவு செய்த ரசிகரின் பதிவை தேர்வு செய்து சஞ்சய் பதிலளித்துள்ளதாக ரசிகர்கள் அந்த பதிவின் கீழ் கருத்தை குறிப்பிட்டு வருகின்றனர். ஜடேஜாவை விமர்சனம் செய்ததால் தான வர்ணனையாளர் பதவி பறிபோனது, இருந்தாலும் செய்த தவறையே மீண்டும் மீண்டும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் செய்வதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
