"எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும்... அவரு கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டாரு"... 'சேவாக் பரபரப்பு கருத்து!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைக்காது என தனக்கு முன்பே தெரியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நேற்று முதல்நாள் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் தோனிக்கு மாற்று யார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், கே.எல் ராகுல் அந்த இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பிடிப்பார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது கே.எல் ராகுல் ஒருநாள் மற்றும் டி 20 அணியில் கீப்பராக தேர்வாகியுள்ளார்.
இந்தியாவின் டெஸ்ட் அணியில் மட்டுமே தேர்வாகியுள்ள ரிஷப் பந்த், அதிலும் மாற்று வீரராகவே இருப்பார் எனவும், சாகாதான் கீப்பராக இருப்பார் எனவும் கூறப்படும் நிலையில், இந்திய அணியில் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைக்காது என தனக்கு முன்பே தெரியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சேவாக், "இந்திய அணியில் ரிஷப் பந்த் எடுக்கப்படாதது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. கடந்த இந்திய தொடரில் அவர் அணியில் இடம் பிடித்தும் பிட்டாக இல்லாததால் கே.எல் ராகுல் தான் அணியில் இருந்தார். பிளெயிங் லெவனில் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை.
ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நன்றாக விக்கெட் கீப்பிங் செய்தார். பேட்டிங்கும் நன்றாக செய்தார். ரிஷப் பந்த் அப்படி இல்லை. அவர் தன் பேட்டிங் ஸ்டைலை மாற்ற வேண்டும். அவர் போட்டியை பினிஷ் செய்வது இல்லை. விக்கெட்டை எளிதாக இழந்து விடுகிறார். அவர் மோசமாக விக்கெட்டை இழக்காமல் இருந்தால் அணியில் எடுக்கப்பட்டு இருப்பார். அவர் கொஞ்சம் பொறுப்பாக ஆட வேண்டும். தோனிக்கு முன் அணியில் சிறப்பாக விக்கெட் கீப்பர் யாரும் கிடையாது. ரிஷப் பந்த் தற்போது தோனியை போல நன்றாக விக்கெட் கீப்பிங் செய்கிறார்.
ஆனால் அவர் பொறுப்பாக பேட்டிங் செய்வது இல்லை. கோலி, ரவி சாஸ்திரி இருவரும் கண்டிப்பாக ரிஷப் பந்த் ஆட்டத்தை விரும்பி இருக்க மாட்டார்கள். அவர்தான் மாற வேண்டும். அவர்தான் விக்கெட்டை இழக்காமல் பொறுப்பாக ஆட வேண்டும். அவர்தான் திறமையை நிரூபிக்கவில்லை என்றால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
