'ஸ்கெட்ச் ரோஹித்துக்கு மட்டும் இல்ல... மும்பை இந்தியன்ஸ் 'டீம்'க்கு!?'.. இந்திய அணியில்... சூர்யகுமார் யாதவ் நிராகரிப்புக்கு பின்... வெளியான 'பரபரப்பு' தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி தேர்வில் கோலி பாகுபாடு காட்டுவதாக புகார்கள் வெளியாக தொடங்கி உள்ளது.ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் இந்திய அணியின் விவரம் நேற்று முதல்நாள் வெளியானது.
ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் நடக்க உள்ளது.இந்த சுற்றுப் பயணத்தில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு தற்போது அணிக்குள் இளம் வீரர்கள் பலர் இடம் பிடித்து உள்ளனர்.
இதில் ரோஹித் நீக்கத்திற்கு காயம் காரணமாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவின் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு கே. எல் ராகுல் தற்போது ஓப்பனிங் இறங்க உள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணி தேர்வில் கோலி பாகுபாடு காட்டுவதாக புகார்கள் வெளியாக தொடங்கி உள்ளது. அதாவது தனக்கு ஆதரவாக இருக்கும் வீரர்களுக்கு கோலி வாய்ப்பு வழங்குகிறார். ஆர்சிபி அணியில் இருக்கும் வீரர்களுக்கும், முன்னாள் ஆர்சிபி வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறார் என்று புகார் உள்ளது.மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்று புகார் உள்ளது.
அதேபோல் மும்பை அணியில் இருக்கும் வீரர்களை கோலி புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது. மும்பை அணியில் ஆடும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ராகுல் சாகர் ஆகியோருக்கு கோலி வாய்ப்பு வழங்குவது இல்லை. இத்தனை வருடமாக சூர்யகுமார் யாதவ் நன்றாக ஆடினாலும் கூட கோலி வேண்டும் என்றே புறக்கணிக்கிறார் என்று புகார் உள்ளது.
அதன்படி ரோஹித் சர்மாவிற்கு நெருக்கமான நபர்களை கோலி புறக்கணிக்கிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோலி இன்னும் மௌனம் கலைக்கவில்லை. இந்த புகார்களுக்கு கோலி பதில் சொல்லவில்லை.
அதேபோல் ரோஹித்தும் இது தொடர்பாக தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். யாராவது ஒருவர் முதலில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.ஆனால் இரண்டு பேருமே இது தொடர்பாக வெளிப்படையாக எதுவும் பேசுவது இல்லை.
இந்திய அணியில் மூத்த வீரராக்களை புறக்கணிக்கிறார் என்று தோனி மீது இதே புகார் வைக்கப்பட்டது.
மூத்த வீரர்களை தோனி வீட்டிற்கு அனுப்பினார் என்று புகார் வைக்கப்பட்டது. தற்போது அதே புகார் கோலி மீது வைக்கப்படுகிறது. கோலி உடனே இதுபோன்ற புகார்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.