"அவர ஏன் 'அந்த டீம்ல' எடுத்தாங்கன்னு... இப்போதான் புரியுது!"... 'சிக்கிய இளம்வீரரை வெச்சு செஞ்ச ரசிகர்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத்திற்கு எதிரான போட்டிக்குப்பின் டெல்லி அணி வீரர் ரிஷப் பந்த் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை தோற்கடித்து 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 219 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய டெல்லி அணியில் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 19 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சீஸனின் தொடக்கத்தில் நன்றாக விளையாடிய டெல்லி தற்போது மோசமாக திணற தொடங்கியுள்ளது.
வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள டெல்லி அணியில் பிரித்வி ஷா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் என யாருமே தற்போது சரியாக விளையாடவில்லை. அதிலும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் இருவருமே தற்போது மிக மோசமாக திணறி வருகிறார்கள். நேற்றும் 220 என்ற இமாலய இலக்கை விரட்டியபோது, டெல்லி அணியின் முன்னணி வீரரான பந்த் 35 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதையடுத்தே அவர் மெதுவாக விளையாடிய விதத்தால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். முன்னதாக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் அணியில் மட்டுமே பந்த் இடம் பிடித்துள்ள நிலையில், டெஸ்ட் தொடரிற்கு இப்போதிருந்தே பந்த் தயாராகிறார் எனவும், பிசிசிஐ ஏன் அவரை டெஸ்ட் தொடரில் எடுத்து என்பதை அவர் நிரூபித்துவிட்டார் எனவும் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
The longest time people saw Rishabh Pant on TV this IPL #SRHvsDC pic.twitter.com/8I5aK0OMR1
— Indian Premier Lakhan (IPL) (@DhinaaDhinnDhaa) October 27, 2020
society if rishabh pant stopped playing cricket pic.twitter.com/oXvHa674hG
— / (@ffsvirat) October 27, 2020
Rishabh Pant's last 4 IPL innings. The Strike Rate has been a problem for him.
36(35)
27(33)
14(20)
5(9)#IPL2020 #SRH #DelhiCapitals #SRHvsDC #Warner #Saha
— JustCricket (@justcricketblog) October 27, 2020
Rishabh Pant proved why BCCI picked him for only Test squad. #RishabhPant #SRHvDC
— IPL Memes (@IPLmemesonly) October 27, 2020
Smart cricket from Rishabh Pant as he's just selected for Test squad in Australia so better preparing for it already
— Nitin #RecoverHitman (@LoyalMIfan) October 27, 2020