"இதுக்கு மேலயும் 'கங்குலி' சும்மா இருக்கக் கூடாது... 'கொஞ்சம்' கூட நல்லா இல்ல பாத்துக்கோங்க..." கடுப்பான முன்னாள் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி மற்றும் டி20 என மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும், பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் ஏன் இடம்பெறவில்லை என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் மூன்று சீசன்களாக தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வரும் நிலையில், மிகச் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். மிக திறமையாக ஆடும் அவருக்கு இதுவரை ஒரு முறை கூட சர்வதேச இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த முறையாவது அவருக்கு இடம் கிடைக்கும் என கருத்தப்பட்டிருந்த நிலையில், அணியில் அவரது பெயர் இல்லை.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார். 'சூர்யகுமார் யாதவ் தற்போதுள்ள வீரர்களில் மிகவும் திறமையான வீரர். அவர் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார் என தெரியவில்லை. தொடர்ந்து பல போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியில் இடம் பிடிக்க இதைவிட ஒரு வீரர் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. ஒரு வீரர் 26 -34 வயதுக்குள் சிறப்பாக ஆட முடியும். சூர்யகுமார் தற்போது 30 வயதில் இருக்கிறார். அவருக்கு இப்போதாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
எதன் அடிப்படையில் சூர்யகுமார் யாதவை புறக்கணிக்கிறார்கள் என தெரியவில்லை. காயம் காரணமாக அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் சூர்யகுமாரை அணியில் எடுத்திருக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பது குறித்து கங்குலி உடனடியாக கேள்வி எழுப்ப வேண்டும்' என திலீப் தெரிவித்துள்ளார்.