'எங்களுக்கு வேற வழி தெரியல'... 'பொதுமக்கள் இதுக்கு மட்டும் தான் வெளியே வர முடியும்'... பிரான்ஸ் எடுத்த கடினமான முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனாவின் ஆட்டம் முடியாத நிலையில், பிரான்ஸ் அரசு மீண்டும் ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தினசரி இறப்பு விகிதம் என்பது உயர்ந்து கொண்ட சென்ற நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு 33 ஆயிரம் புதிய வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மனுவேல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் மக்கள் மருத்துவ சேவை, மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது. உணவகங்கள், பார்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என இம்மானுவேல்'தெரிவித்துள்ளார். பிரான்சில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டாவது அலை என்பது மிகவும் அதிகமான உக்கிரத்துடன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தொழிற்சாலைகள் மற்றும் பொதுச் சேவைகள் திறந்து இருக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.