‘நாட்டுக்காக விளையாடிய அந்த அனுபவம்’... ‘போட்டிக்கு பின்பு’... ‘யாக்கர் மன்னன் நடராஜனின் முதல் ட்வீட்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானது குறித்து, தமிழக வீரர் நடராஜன் தனது ட்வீட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் முதல் இரு போட்டிகளில், தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் இரு போட்டிகளையும் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், 3-வது போட்டியயில், மாற்றம் செய்யப்பட்டு, தமிழக வீரர் நடராஜன் சர்வதேச போட்டியில் முதன்முறையாக களம் இறங்கினார்.
முதல் இருபோட்டிகளிலும் முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் சீனியர் வீரர்களான பும்ரா, ஷமி ஆகியோர் தடுமாறினார். ஆனால் 3-வது போட்டியில் களமிறங்கிய 5.1-வது ஓவரிலேயே, ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் விக்கெட்டை வீழ்த்தி, அறிமுகப் போட்டி என்று தெரியாதவாறு நடராஜன் அதிரடி காட்டினார்.
அதன்பிறகு தனக்கு கொடுக்கப்பட்ட 10 ஓவரில், 70 ரன்கள் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து இந்திய அணி வெற்றிபெற வழிவகுத்தார். இதனால் இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள், முன்னாள் வீரர்கள் உள்பட பலர் அவரது வெற்றியை கொண்டாடினர்.
நேற்று போட்டி முடிந்தநிலையில், இன்று தனது ட்வீட்டரில் பதிவுட்டுள்ள தமிழக வீரர் நடராஜன், ‘நாட்டுக்காக விளையாடிய அந்த தருணம், நினைத்துக்கூட பார்க்கமுடியாத கனவு போன்று இருந்தது. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. மேலும் பல சவால்களை சந்திக்க தயாராக உள்ளேன்’ என்று ட்வீட் செய்துள்ளார். இதனை பலரும் லைக் செய்து வருகின்றனர்.
It was a surreal experience to represent the country. Thanks to everyone for your wishes.
Looking forward for more challenges 🇮🇳 pic.twitter.com/22DlO9Xuiv
— Natarajan (@Natarajan_91) December 3, 2020