'ஐபிஎல் போட்டியில் செம்ம ஃபார்ம்.. ஐசிசி உலகக் கோப்பைக்கு பெர்ஃபெக்ட் டோன்'.. வீரரைப் புகழ்ந்த கிரிக்கெட் பிரபலம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 20, 2019 10:57 AM

ஐபிஎல் மேட்சில் செம்ம ஃபார்மில் இருப்பதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செம்ம டோனில் இருப்பதாகவும் ஐபிஎல் சென்னை அணியின் கேப்டனாக இருந்தவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ்.தோனியைப் புகழ்ந்து நியூஸிலாந்து வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் பேசியுள்ளார். 

brilliant form and sets the tone perfectly, Mccullum praises MSdhoni

அழுத்தமான அல்லது நெருக்கமான சூழ்நிலைகளிலும், அந்த அழுத்தத்தை ஒருவித புரிலுடன் தாக்குபிடிக்கும் வீரர்களுள் ஒருவராக தோனியை நம்பலாம் என்றும் அடுத்து வரும் உலகக் கோப்பை போட்டியில் மிக முக்கியமான துடுப்பாக 'தல' தோனி இருப்பார் என்று நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

போட்டியை பற்றிய அடுத்தடுத்த நகர்வுகளுக்கு ஒர் ப்ளூ பிரிண்ட்டை தன் சிந்தனைக்குள் உருவாக்கி, அந்த போட்டியை அணுகுபவர் தோனி என்றும், கிரீஸில் நிற்கும்போது பிரஷரை எதிர்கொண்டு போட்டியின் போக்கை சரியாக பிடிக்க வல்லவர் என்றும் தோனியைப் புகழ்ந்துள்ளார்.

அதோடு, சமீப காலமாக உடலினை உறுதியாக வைத்திருக்கும் தோனி, சமீபகாலமாக ஒரு பேட்ஸ்மேனாகவும் அபாரமாக விளையாடி திரும்பவும் ஃபார்மில் இருக்கும் தோனி ஐபிஎல் மேட்ச்களில் தன்னுடைய பெஸ்ட்டைக் கொடுத்தார். அடுத்தடுத்து உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவதற்கான முழுமையான டோனுடன் தோனி இருப்பதாக மெக்கல்லம் குறிப்பிட்டுள்ளார்.