‘அப்படியே சச்சின் ஆடுறத பாக்கற மாதிரியே இருக்கு..’ பிரபல வீரரைப் புகழ்ந்த பயிற்சியாளர்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | May 20, 2019 10:57 AM
உலகக்கோப்பை தொடர் இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணி குறித்துப் பேசியுள்ளார்.

ஒரு வருட தடைக்குப் பின்னர் நேரடியாக உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ள ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மீது கிரிக்கெட் ரசிகர்கள் கவனம் திரும்பியுள்ளது. இது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள அந்த அணியின் பயிற்சியாளர் லாங்கர், “நாங்கள் இந்தியா போல ஆடுகிறோம், இங்கிலாந்து மாதிரி ஆடுகிறோம் எனக் கூறுகிறார்கள். உண்மையில் நாங்கள் ஆஸ்திரேலியா போல தான் ஆடுவோம். அதுவே எங்களுக்குப் பெருமை” எனக் கூறியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் குறித்துப் பேசும்போது, “நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் ஸ்மித் ஒரு மாஸ்டர் மாதிரி ஆடியுள்ளார். கடந்த வாரம் பிரிஸ்பேனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரது ஷாட்டுகள் நம்ப முடியாததாக இருந்தது. அவரது ஆட்டத்தைப் பார்த்தபோது எனக்கு சச்சின் டெண்டுல்கர் ஆடுவதைப் பார்ப்பது போலவே இருந்தது. ஸ்மித் மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளார்.” எனக் கூறியுள்ளார்.
