அடுத்த ஐபிஎல் சீசனில் ‘தல’ விளையாடுவாரா? மாட்டாரா?.. பரபரப்பான தகவலை வெளியிட்ட சிஎஸ்கே சிஇஓ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 17, 2019 01:36 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் தோனி விளையாடுவது தொடர்பான கேள்வி ஒன்றிற்கு சென்னை அணியின் சிஇஒ அதிரடியாக பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பல சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை விளையாடிய ஐபிஎல் தொடரில் 3 முறை தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
தற்போது நடந்து முடிந்த 12 -வது ஐபிஎல் சீசனில் சென்னை அணி 1 ரன்னில் மும்பை அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது. இதனை அடுத்து போட்டி முடிந்த பின், அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது பற்றி கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்ஐய் மஞ்ரேக்கர் கேள்வி ஒன்றை எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த தோனி, கண்டிப்பாக அடுத்த சீசனில் விளையாட உள்ளதாக கூறினார்.
இந்நிலையில் சென்னை அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் சிட்டி எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியில்,‘அவர் திரும்ப விளையாட வருவார்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. கடந்த இரண்டு வருடமா தோனியின் பேட்டிங் குறித்து குறை சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அவரது புள்ளிவிபரங்களைப் பார்த்தால் அற்புதமாக விளையாடியது தெரியும். அடுத்த ஆண்டு நிச்சயம் தோனி விளையாடுவார்’ என தெரிவித்துள்ளார்.
