கடவுளே! இந்த ரெண்டு பேரோட 'லவ்' ஸ்டோரிக்கு... ஒரு 'எண்டு' கார்டு இல்லையா?... கதறும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜ்கோட்டில் இன்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. இதன் மூலம் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக் கொண்டது. குறிப்பாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் இன்று மிகவும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

எனினும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜாம்பா மீண்டும் ஒருமுறை தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய போட்டியுடன் சேர்த்து இதுவரை ஒருநாள் போட்டிகளில் ஐந்துமுறை ஜாம்பாவின் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ரசிகர்கள் உங்க ரெண்டு பேரோட லவ் ஸ்டோரிய இதோட நிறுத்திக்குங்க என்று இருவரையும் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். எனினும் ஜாம்பாவின் பந்துவீச்சில் விராட் தன்னுடைய விக்கெட்டை தொடர்ந்து பறிகொடுப்பது இந்திய ரசிகர்களை சற்றே கவலை கொள்ள செய்துள்ளது.
