போட்டிக்கு நடுவே... திடீர் திடீர் என 'காணாமல்' போன வீரர்கள்... என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 18, 2020 01:10 AM

இன்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. இதன் மூலம் கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக் கொண்டது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மிகவும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

INDVsAUS: Rohit Sharma and Shikar Dhawan injured in 2-nd odi

போட்டிக்கு நடுவே பீல்டிங் செய்யும்போது ரோஹித், தவான் மற்றும் நவ்தீப் சைனி ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் நவ்தீப் சைனி சில ஓவர்களுக்கு பின் மீண்டும் களத்திற்கு வந்தார். ஆனால் தவான், ரோஹித் இருவரும் அதன்பிறகு வரவில்லை. இதனால் ரோஹித்துக்கு பதில் கேதார் ஜாதவ்வும், தவானுக்கு பதில் சாஹலும் பீல்டிங் செய்தனர்.

இந்தநிலையில் ரோஹித் அடுத்து பெங்களூரில் நடைபெறும் 3-வது போட்டியில் கலந்து கொள்வார் என்று விராட் கோலி விளக்கம் அளித்தார். ஆனால் தவானின் நிலைகுறித்து இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை. இதனால் ரிஷப் பண்ட் போல தவானுக்கும் காயம் பெரியளவில் இருக்குமா? என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.