உண்மையிலே 'ஹார்ட் மெல்டிங்' தருணம்னா.. அது இதான்'.. ஒரு நொடியில் நெகிழ வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 25, 2019 11:08 AM

இதயத்துடிப்பின் வேகம் குறைவதை இங்கிலாந்து நாட்டில் ஆப்பிள் வாட்ச் ஒன்று எச்சரித்ததை அடுத்து சரியான நேரத்தில் நபர் ஒருவர் மாரடைப்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

Apple watch saves a an England man from heart attack

இதயத் துடிப்பு என்பது சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 73 முறை இருக்கும் என்பது கணக்கு. இது ஒவ்வொரு தனி நபரைப் பொருத்து 60 முதல் 100 வரை இருக்கும். ஆனால் 40க்கும் கீழ் இதயத் துடிப்பு குறைந்ததை, கட்டுரை எழுத்தாளர் ஒருவருக்கு எச்சரித்து, அவரது உயிரை காப்பாற்றியுள்ளது ஆப்பிள் வாட்ச்.

இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் நகரில் இயங்கும் ஒரு இதழுக்கு தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை எழுதித்தரும் பால் ஹட்டன் என்பவர்தான், ஆப்பிள் வாட்சினை கைகளில் கட்டியிருந்துள்ளார். இதயத்துடிப்பில் சீரான இயக்கம் மற்றும் ஈசிஜி எனப்படும் இதய அலைவரிசையை அளவிடும் ஆப்பினை இந்த வாட்ச் தன்னகத்தே கொண்டுள்ளது.

இதற்கென அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதியை முறையாகப் பெற்றுள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்த தொழில்நுட்பங்களால்தான், ஹட்டனுக்கு இதயத்துடிப்பு 40 ஆக குறையத் தொடங்கியபோது ஆப்பிள் வாட்ச் எச்சரித்துள்ளது. இதைக் கண்ட ஹட்டன், உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டார்.

தற்போது அந்த வாட்சை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தன்னுடைய இதயம் சீராக இயங்குவதை தன்னால் காண முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #APPLEWATCH #ENGLAND #HEARTBEAT #ALERT