‘ஆஷஸ் தொடரில் முதல் முறையாக நிகழ்ந்த அதிசயம்’... ‘அதிரடி மாற்றம் கொண்டுவந்த ஐசிசி’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 23, 2019 08:30 PM

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, ஆஷஸ் தொடரில் விளையாடும் வீரர்கள், தங்களின் பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சியுடன் விளையாட உள்ளனர்.

Ashes jerseys to have players names and numbers

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ள ஆஷஸ் தொடர் மூலம்  டெஸ்ட் போட்டிகளின் 140 ஆண்டுகால வரலாறு மாற்றப்பட உள்ளது. முதன்முறையாக இந்த தொடரில் வீரர்களின் ஜெர்சியின் பின்புறம், அவர்களின் பெயர் மற்றும் ஜெர்சி எண் குறிப்பிடப்பட உள்ளது. இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுகுறித்த தகவல் ஆரம்பத்தில் பரவிய நிலையில், தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகின்றன. தொடங்கியது முதல் இன்று வரை வீரர்களுக்கான ஜெர்சிகளில் எந்தவிதமான பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை. போட்டி விதிகள் மாறியபோதிலும், வெள்ளை உடைகள் மட்டுமே பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் இருப்பதுபோல் அல்லாமல், ஜெர்சியின் பின்புறம் பெயர்கள் அச்சிடப்படாமல், முழு வெள்ளை உடையுடனே டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

Tags : #ASHES #ENGLAND