சச்சின் மகளுடன் காதலா?... 'சர்ச்சையை' கிளப்பி இருக்கும் இளம்வீரர்... என்ன காரணம்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் கடவுள் என புகழப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவை இளம்வீரர் ஒருவர் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக நேற்று நடைபெற்ற போட்டியில் நடந்த ஒரு சம்பவம் இதை பெரியளவில் பேசும்படி செய்துள்ளது.

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது மும்பை வீரர் சூர்யகுமார் அடித்த பந்தை சுப்மான் கில் டைவ் அடித்து பிடித்தார். இந்த புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்த சாரா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் அதை பகிர்ந்து ஹார்டின்களை பகிர, தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன் அரசல், புரசலாக அடிபட்ட விஷயத்துக்கு தற்போது சாராவின் இன்ஸ்டா ஸ்டோரி எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. முன்னேற வேண்டிய வயதில் இது தேவையா? என சுப்மான் கில்லை சிலர் விமர்சிக்க, வேறு சிலர் இதில் என்ன தவறு என அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதற்கு முன் தங்களது சமூக வலைதளங்களில் இருவரும் மாறி,மாறி ஹார்ட் எமோஜிகளை பறக்க விட்டதும் தற்போது விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மற்ற செய்திகள்
