VIDEO : "நீங்க 'விஜய்' ஃபேனா?... இல்ல 'கிரிக்கெட்' ஃபேனா?..." இல்ல ரெண்டும்னா கூட ... இந்த 'வீடியோ' உங்களுக்காக தான்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், தொடரை வென்று இந்தியா திரும்பியுள்ள வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன், இந்திய அணி நிச்சயம் தொடரை கைப்பற்றாது என்றும், டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியைக் கூட இந்திய அணியால் வெல்ல இயலாது என்றும், மைக்கேல் வாகன், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால், தங்கள் முன்பிருந்த தடைகளையெல்லாம் தாண்டி, டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி தங்களால் சாதிக்க முடியாது என கூறிய அத்தனை பேருக்கும் தக்க பதிலடியை கொடுத்துள்ளது. முன்னணி வீரர்கள் பலர் இல்லாத இந்திய அணி, அதிக அனுபவமில்லாத இளம் வீரர்களைக் கொண்டு ரஹானே தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் இந்திய அணிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, விஜய் படத்தில் வரும் வசனங்கள் மற்றும் பாடல்களுடன் இந்திய அணியின் வீரர்களின் வீடியோக்களை இணைத்து 'Mashup' வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். வேற லெவலில் இருக்கும் இந்த வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாது, விஜய் மற்றும் சினிமா ரசிகர்களிடையேயும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
