"என்கிட்டயும் 'வேலை'ய காட்ட ஆஸ்திரேலியா 'டீம்' நெனச்சாங்க... ஆனா என் கதையே வேற..." 'ஷர்துல் தாக்கூர்' சொன்ன பரபரப்பு 'விஷயம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே ஆன கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 54 ரன்கள் முன்னிலையுடன் உள்ள நிலையில், முன்னதாக முதல் இன்னிங்ஸின் போது 7 ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 62 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.
அதே போல ஷர்துல் தாக்கூரும் 67 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். சற்று தடுமாற்றம் கண்ட இந்திய அணியை இவர்கள் இருவரும் சேர்ந்து ஓரளவு மீட்டெடுத்தனர். இதற்கு முந்தைய டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தைகளால் சீண்டினர். அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், வார்த்தைகளால் அஸ்வினை சீண்டியிருந்தது கடும் கண்டனங்களை கிளப்பியிருந்தது.
இந்நிலையில், இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னை சீண்ட முயற்சி செய்ததாக ஷர்துல் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார். 'ஆஸ்திரேலிய வீரர்கள் என்னுடன் பேச முற்பட்டனர். ஆனால் நான் அவர்களிடம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஒன்றிரண்டு முறை சில சாதாரண கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். ஆனால், அவர்கள் என்னை தொடர்ந்து சீண்ட முயன்றதும் நான் அதனைக் கண்டு கொள்ளாமல் எனது ஆட்டத்தை ஆடினேன்' என தாக்கூர் தெரிவித்துள்ளார்.