“அவ்ளோ வலியோட அவர்... என்னாலேயே நம்ப முடியல...” - 'வரலாறு' படைத்த 'அஸ்வினின்' ஆட்டம்... 'மனைவி'யின் நெகிழச் செய்யும் 'பதிவு'! - உருகும் 'நெட்டிசன்ஸ்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி அபாரமாக ஆடி, போட்டியை டிரா செய்தது.

ஐந்து விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் கைகோர்த்த அஸ்வின் - ஹனுமா விஹாரி ஆகியோர் மேற்கொண்டு விக்கெட்டுகள் எதுவும் விழாமல் தடுப்பாட்டம் ஆடி போட்டியை டிரா செய்தனர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் உள்ளிட்ட காரியங்களால் சீண்டிய போதும், கவனத்தை சிதற விடாமல் இருவரும் ஆடி அசத்தினர்.
முன்னதாக, அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டிருந்த போதும் அதனை காட்டிக் கொள்ளாமல் ஆடியதை கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஸ்வினின் மனைவி ப்ரீத்தி அஸ்வின், தனது கணவர் குறித்து உருக்கமான ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
The man went to bed last night with a terrible back tweak and in unbelievable pain. He could not stand up straight when he woke up this morning. Could not bend down to tie his shoe laces. I am amazed at what @ashwinravi99 pulled off today.
— Prithi Ashwin (@prithinarayanan) January 11, 2021
அதில், 'நேற்று இரவு அஸ்வின் தூங்க செல்லும் போதே அவருக்கு கடுமையான முதுகு வலி இருந்தது. இன்று காலை எழுந்த போது அவரால் நிற்க கூட முடியவில்லை. கீழே குனிந்து அவரின் ஷூ லேஸை கூட அவரால் கட்ட முடியாத அளவில் அவரது நிலை இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று அஸ்வின் ஆடிய ஆட்டம் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது' என குறிப்பிட்டுள்ளார்.
Instant tears!! 😭Thanks for being there with me through all this🙏🙏 https://t.co/aauA4Bg7Dy
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) January 11, 2021
இதனை ரீட்வீட் செய்த அஸ்வினும் தனது மனைவிக்கு உருக்கத்துடன் நன்றியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
