"ஒரு 'ஆஸ்திரேலிய' கேப்டன்னு கூட பாக்காம... இப்டியா 'அஸ்வின்' செஞ்சு விடுறது?!..." இது மாஸான 'பதிலடி' ஆச்சே!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Jan 11, 2021 06:33 PM

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய  அணி அபாரமாக ஆடி, போட்டியை டிரா செய்தது.

Ravi ashwin savage reply to australia captain tim paine sledging

கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 309 ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில், புஜாரா, பண்ட் ஆகியோர் அவுட்டான பிறகு களத்தில் நின்ற அஸ்வின் மற்றும் விஹாரி ஆகியோர் விக்கெட்டுகள் எதுவும் விழாமல் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கனவை தகர்த்தனர்.

இருவரும் சேர்ந்து தடுப்பாட்டம் ஆடிய நிலையில், ஸ்லெட்ஜிங் செய்து இந்திய வீரர்களை வீழ்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் பல முறைகளில் இந்திய வீரர்களை சீண்டினர். அப்போது விக்கெட் கீப்பரான ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் அஸ்வினிடம், நான்காவது டெஸ்ட் போட்டி பற்றி கிண்டலாக பேசினார்.

'கடைசி டெஸ்ட் போட்டி விளையாட வேண்டி காத்திருக்க எங்களால் முடியவில்லை' என பெயின் கூறினார். நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் மைதானத்தில் வெளிநாட்டு அணி வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம். இதனைக் குறிப்பிட்டு தான் பெயின் இந்திய அணியை கிண்டல் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஸ்வின் கருத்து ஒன்றை பெயினிடம் தெரிவித்தார். 'உங்களை இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பார்க்க ஆவலாக உள்ளேன். அது தான் உனது கடைசித் தொடராக இருக்கும்' என சரமாரி பதிலடி ஒன்றைக் கொடுத்தார். இதன் பிறகு, டிம் பெயின் ஒட்டுமொத்தமாக வாயடைத்து போனார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டிம் பெயின், அணியை சரிவர தலைமை தாங்கவில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அணியின் கேப்டனாக இருப்பதால் தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  

 

இதனால், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இழக்க நேர்ந்தால் அதன் பிறகு டிம் பெயின் டெஸ்ட் அணியில் இடம்பெறுவது என்பதே கேள்வியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ravi ashwin savage reply to australia captain tim paine sledging | Sports News.