காயத்தால் விலகும் 'இந்திய' வீரர்கள்.. "ஆள் வேணும்னா சொல்லுங்க, நான் வர்றேன்.. சும்மா பட்டைய கெளப்புவோம்..." 'முன்னாள்' வீரரின் அசத்தல் 'ட்வீட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் காயத்தால் விலகி வருகின்றனர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் காயத்தால் வெளியேறிய நிலையில், பேட்ஸ்மேன் கே.எல் ராகுலும், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் உடனடியாக தொடரில் இருந்து வெளியேறினார்.
தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு மேலும் ஒரு பெரிய அதிர்ச்சியாக பும்ரா, ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என தற்போது தெரிய வந்துள்ளது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டியில் பல முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கவுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ட்விட்டரில் நகைச்சுவையுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், காயத்தால் வெளியேறிய இந்திய வீரர்கள் புகைப்படத்தை பகிர்ந்த சேவாக், 'இந்திய அணியில் ஆடுவதற்கு கூட 11 வீரர்கள் இல்லையென்றால் சொல்லுங்கள், நான் ஆஸ்திரேலியா வருகிறேன். குவாரன்டைன் விதிகளை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
Itne sab players injured hain , 11 na ho rahe hon toh Australia jaane ko taiyaar hoon, quarantine dekh lenge @BCCI pic.twitter.com/WPTONwUbvj
— Virender Sehwag (@virendersehwag) January 12, 2021
இந்த பதிவு ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
