"அந்த 'ஒரு' விஷயத்த மட்டும் 'ஞாபகம்' வெச்சுக்கோ..." ரவி சாஸ்திரி சொன்ன 'வார்த்தை'... ஷர்துல் ஆட்டத்திற்கு பின்னால் இருந்த 'காரணம்' இது தான்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சற்று தடுமாறிய நிலையில், 7 ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர், யாரும் எதிர்பார்க்காத வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இருவரும் இணைந்து 123 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் நெருக்கடியை சற்று குறைத்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் அனுபவம் மிக்க பந்து வீச்சினை மிக சிறப்பாக எதிர்கொண்ட இருவரது பேட்டிங்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய ஷர்துல் தாக்கூர், தான் இப்படி சிறப்பாக ஆடியதற்கு பின்னால் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்ன மிக முக்கிய விஷயம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
'நான் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது அணி மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தது. அங்கிருந்த பார்வையாளர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு நாள் தொடர் ஆரம்பிக்கும் போது சொன்ன விஷயத்தை நினைவு கூர்ந்தேன். இந்த நாட்டில் நீங்கள் சிறப்பாக ஆடினால் உங்களை அனைவரும் பாராட்டுவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அதனை மனதில் வைத்து தான் சிறப்பாக ஆடினேன். எனது அணிக்கும் அது உதவியது. பார்வையாளர்கள் அதிக சத்தங்களை எழுப்புவார்கள். ஆனால், அதே வேளையில் நாம் சிறப்பாக ஆடினால் அவர்கள் நம்மை உற்சாகப்படுத்தவும் செய்வார்கள். அதே போல, அவர்கள் நம்மை மதிக்கவும் செய்வார்கள்' என தனது ஆட்டத்தின் ரகசியத்தை ஷர்துல் தாக்கூர் வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்
