'நான் சிவனேன்னு தானே இருந்தேன்'... 'என்ன தெருவுல இழுத்து விட்டு'... டிம் பெயின்னை கலாய்க்க நினைத்த இந்திய ரசிகர்கள் செஞ்ச காமெடி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனின் கப்பா மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, 33 வருடங்களாக அந்த மைதானத்தில் தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலிய அணியின் சாதனையை தகர்த்தது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக முக்கியமான வெற்றியாக இது பார்க்கப்படும் நிலையில், பல முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்துள்ளது. இந்திய அணியை பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வரும் அதே வேளையில், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக, சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், அஸ்வினிடம் 'அடுத்த போட்டியில் கப்பாவில் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்' என கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை மனதில் வைத்து இந்திய அணியையும் தோற்கடிப்போம் என்ற எண்ணத்தில் அப்படி அவர் கிண்டலாக பேசியிருந்தார்.
ஆனால், கடைசி போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில், இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. இதனால், டிம் பெயினை அனைவரும் கிண்டலும், விமர்சனமும் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினுக்கு பதிலாக, லண்டனைச் சேர்ந்த டிம் பெயின் என்பவரை தவறுதலாக இன்ஸ்டாவில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திட்டியும், அவரை டேக் செய்து மீம்ஸ்களை பகிர்ந்தும் வருகின்றனர்.
மொத்தமாக, 600 பேர் வரை அவருக்கு தவறுதலாக மெசேஜ்களை அனுப்பியுள்ளனர். இதில் சிலவற்றை அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிரவும் செய்துள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இன்ஸ்டாக்ராமில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
