நள்ளிரவில் காதலி வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்.. சுற்றி வளைத்த பெண்ணின் குடும்பத்தினர்.. கடைசியில் கிராமத்தினர் எடுத்த முடிவு.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீஹார் மாநிலத்தில் காதலியை பார்க்கச் சென்ற இளைஞரை இளம்பெண்ணின் குடும்பத்தினர் சுற்றி வளைத்திருக்கின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தில் கிராம மக்கள் எடுத்த முடிவு காதலர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காதல்
காதல் பல வினோதமான காரியங்களில் மனிதர்களை ஈடுபட வைக்கும். தங்களது காதலுக்கு உரியவர்களை கவர, என்னவேண்டுமானாலும் செய்ய காதலர்கள் தயங்குவதில்லை. குறிப்பாக இணையை பார்க்க காதலர்கள் எடுக்கும் முயற்சிகள் வெகு சுவாரஸ்யமானவை. ஆனால், இவை எல்லாம் வீட்டில் இருப்பவர்களிடத்தில் மாட்டிக்கொள்ளும் வரையில் தான். அப்படியான ஒரு சம்பவம் தான் பீகாரில் நடைபெற்றிருக்கிறது.
பீகாரின் கைகாட் பஞ்சாயத்தின் பரஹர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் ராம். இவருடைய மகன் பவன் குமார். இவரும் ஓல்ஹா மேத்தா தோலா பஞ்சாயத்தின் ராம்பூர்வா மிசிரியா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரத்தில் காதலியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார் பவன் குமார். அப்போது தனது காரை யாருக்கும் தெரியாமல் மறைவான இடத்தில் நிறுத்திவிட்டு காதலியின் வீட்டுக்குள் சென்றிருக்கிறார் அவர்.
சந்தேகம்
ஆனால், நள்ளிரவில் கார் ஒன்று நிற்பதை பார்த்த கிராமத்தினர் இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடத்தில் விசாரிக்க கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூடிவிட்டது. இதனையடுத்து, காரை கொண்டுவந்து நிறுத்தியது யார் என கிராம மக்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அருகில் இருந்த ஒரு வீட்டினர் சத்தம் எழுப்பவே மக்கள் அங்கு ஓடிச் சென்றிருக்கின்றனர். அப்போது, அந்த வீட்டிற்குள் பவன் குமார் பிடிபட்டிருக்கிறார். இதனையடுத்து கிராம மக்கள் அவரிடம் விசாரிக்க தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்ணை விரும்புவதாகவும், அவரை பார்க்கவே இரவில் வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
திருமணம்
மேலும், அந்த பெண்ணிடத்தில் கிராம தலைவர்கள் பேசும்போது, தானும் பவன் குமாரை விரும்புவதாக இளம்பெண் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அப்போதே இருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து குங்குமத்தை எடுத்து இளம்பெண்ணுக்கு வைக்கும்படி பெண்ணின் வீட்டார் சொல்ல, பவன் குமாரும் அப்படியே செய்திருக்கிறார். இந்நிலையில், அங்கிருந்த ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து வெளியிட, அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
