‘ஃபீல்டிங்’ பண்ண சொன்ன ‘ஃபுட் பால்’ விளையாடிய யுனிவெர்சல் பாஸ்.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 29, 2019 10:38 PM
வார்னரின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 212 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசனின் இன்றைய(29.04.2019) போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஜானி போர்ஸ்டே உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சிக்காக நாடு திரும்பியுள்ளார். இது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. இருந்தாலும் அதிரடி பேட்ஸ்மேன் வார்னர் இருப்பது சற்று ஆறுதல் அளித்துள்ளது.
இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் சாகா பேட்டிங் செய்ய களமிறங்கினர். இதில் சாகா 28 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த வார்னர் அதிரடியாக விளையாடினார். இதில் வார்னர் 81 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.
Chris Gayle 'kicks it' to the boundary
— Ankush Das (@AnkushD86744515) April 29, 2019
https://t.co/OG6tCP798V