ட்ரம்புக்கே 'பல்பு' கொடுத்த பேட்மேன்... இவருக்கும் காப்பிரைட் பிரச்சினையா?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 10, 2019 05:16 PM

காப்பிரைட் பிரச்சினையால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ முடக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

trump uses batman theme music in tweet video gets disabled

அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவி வகிப்பவர் டொனால்டு ட்ரம்ப். வெள்ளை மாளிகை, அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னரே, அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டரில் வெளியிட்டுவிடுவார். முக்கிய அறிவிப்புகளிலிருந்து பதவி பறிப்புகள் வரை ட்விட்டரிலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்.

வருகிற 2020-ம் ஆண்டு அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காகத் தயாராகி வரும் அதிபர் டொனால்டு ட்ரம்ப், வழக்கத்தைவிடவும் ட்விட்டரில் அதிக சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார். இந்த வரிசையில், தனது அலுவலகத்தில் தான் செய்யும்  பணிகளின் அழகை, பேட்மேன் தீம் மீயூசிக்  உடன் வீடியோ பெர்ஃபார்மன்ஸ் ஆக ட்விட்டரில் வெளியிட்டார். வீடியோ வெளியிட்ட 3 மணிநேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துச் சென்றது.

இந்நிலையில், திடீரென வீடியோ காணமல் போனது. காப்பிரைட் பிரச்சினையால் ட்விட்டரில் இருந்த 2 நிமிட வீடியோ முடக்கப்பட்டது. இதுபோல், பிரபல பாடல்களை பின்னணியாகக் கொண்டு ட்விட்டரில் அலப்பறை செய்து வரும் ட்ரம்ப்புக்கு, அமெரிக்க இசையமைப்பாளர்கள் பலரும் காப்பிரைட் பிரச்னையை எழுப்பி வருகின்றனர்.

இதனையடுத்து, தற்போது ட்விட்டரே முடக்கம் செய்தது பெரும் கேலிக்குரிய விஷயமாக சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. ட்விட்டரில் பயங்கர ஆர்வமாக இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது அலப்பறையால் ‘பல்பு’ வாங்க தற்போது நெட்டிசன்களால் கேலி செய்யப்பட்டு வருகிறார்.

Tags : #DONALDTRUMP #PRESIDENT #USA #COPYRIGHT #WARNERBROS #BATMAN #THEDARKKNIGHTRISES