போட்டிக்கு முன் தைரியமாக 'முடிவெடுத்த' ராகுல்... நீங்க ஏன் அப்படி செய்யல?... கோலியை வெளுக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற பெங்களூர்-பஞ்சாப் அணி இடையிலான போட்டியில் பெங்களூர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக கேப்டன் கோலி அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் கொடுத்த இரண்டு ஈஸியான கேட்சுகளை பிடிக்காமல் கோட்டை விட்டார்.

அதற்கு நல்ல தண்டனையாக அவர்கள் இருவரும் சேர்ந்து மேலும் 60 ரன்களை குவித்தனர். இதனால் அந்த அணி 200 ரன்களை எளிதில் கடந்தது. கடந்த போட்டியில் கடைசிவரை போராடி தோல்வியை தழுவியதால், இந்த போட்டியின் போது ராகுல் தன்னுடைய அணியை சேர்ந்த 2 வீரர்களை கழட்டி விட்டு அவர்களுக்கு பதில் மாற்று வீரர்களுடன் களமிறங்கினார்.
கிறிஸ் ஜோர்டான், கவுதம் இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜிம்மி நீஷம், முருகன் இருவரும் இடம் பெற்றனர். ஆனால் கடந்த முறை சொதப்பிய அதே அணியை வைத்துக்கொண்டு கோலி இன்று களமிறங்கினார். குறிப்பாக உமேஷ் யாதவ் கடந்த போட்டியில் அதிக ரன்கள் விட்டு கொடுத்ததும் கோலி அவரை நம்பி மீண்டும் இன்று களமிறங்க , பதிலுக்கு உமேஷ் யாதவ் இன்றும் வள்ளலாக மாறி ரன்களை வாரி வழங்கினார்.
I don't think Anushka is gonna let Kohli hold the baby after watching this match. #KXIPvRCB #KLRahul pic.twitter.com/qhlvx0aGJr
— Abhishek Singh Rajput (@RudeRajput1) September 24, 2020
இந்த போட்டியில் மொத்த பெங்களூர் அணியும் சேர்ந்தும் ராகுல் அடித்த ரன்களை கூட எடுக்கவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் கோலியை மீம்ஸ்களால் அடித்து, துவைத்து காயப்போட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
