நீங்க வேற 'டீமுக்கு' போக வேணாம்... உங்கள வச்சே.. 'கப்ப' ஜெயிச்சிக்குறோம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 15, 2019 10:39 PM
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கடந்த 2 வருடங்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். 2018-ம் ஆண்டு 7-வது இடத்தையும், கடந்த வருடம் 6-வது இடத்தையும் பிடித்தது. இதனால் புதிய கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்க பஞ்சாப் அணி முடிவு செய்தது. மேலும் டெல்லி அணி அஸ்வினை வாங்குவதாகவும் பேச்சு அடிபட்டது.
இந்தநிலையில் பஞ்சாப் அணியின் புதிய ஆலோசகராக முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். தற்போது அவரது ஆலோசனையின்படி அஸ்வினை அணியில் வைத்துக்கொள்ள பஞ்சாப் அணி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் இணை இயக்குநர் நெஸ் வாடியா கூறுகையில், ''அஸ்வினை டெல்லி அணிக்கு நாங்கள் மாற்றவில்லை. அவர் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார். எங்கள் முடிவை நாங்கள் மறுபரிசீலனை செய்துள்ளோம்,'' என தெரிவித்துள்ளார்.
Tags : #IPL #KXIP #RAVICHANDRAN ASHWIN