‘ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்’!.. ‘முதல் இடத்தில் கோலி’!.. ஆனா என் பேரு..? கமெண்ட்டில் கலாய்த்த சஹால்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 31, 2019 12:30 PM

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை கலாய்க்கும் விதமாக சஹால் கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

Chahal hilarious reply to ICC’s post of Test rankings

கிரிக்கெட் வீரர்களின் டெஸ்ட் தரவரிசையை நேற்று ஐசிசி வெளியிட்டது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை தக்க வைத்தார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய வீரர்கள் முதல் 10 இடத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலை ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தது. அதில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால், ‘ஏன் டாப் 10 ரேங்கிங் மட்டும் வெளியிட்டுள்ளீர்கள்? ஏனென்றால் எனது பெயர் 11-வது இடத்தில் இருப்பதனாலா?’ கிண்டல் அடிக்கும் விதமாக கமெண்ட் செய்திருந்தார்.

Tags : #ICC #BCCI #CHAHAL #TEST