‘10 ஆண்டுகளில்’ சிறந்த டி20 அணி... விஸ்டனின் பட்டியலில்... ‘மிஸ்’ ஆன 2 ‘முக்கிய’ வீரர்கள்!...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Dec 30, 2019 05:56 PM

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை விஸ்டன் வெளியிட்டுள்ளது.

Kohli Bumrah In Wisdens T20 Team Dhoni Rohit Misses Out

உலகப் புகழ்பெற்ற விஸ்டன் கிரிக்கெட் முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த 5 வீரர்கள் மற்றும் கடந்த 10 ஆண்டுக்கான ஒரு நாள் அணி ஆகியவற்றை அறிவித்திருந்தது. அதில் சிறந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியும், ஒரு நாள் அணியில் கோலியுடன், தோனி, ரோஹித் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தற்போது விஸ்டன் கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை அறிவித்துள்ளது. இந்த அணியிலும் விராட் கோலி இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு கேப்டன் பதவி தரப்படவில்லை. கோலிக்கு அடுத்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்பிரித் பும்ரா இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

விஸ்டன் கனவு டி20 அணியில் 2 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், கேப்டன் கூல் தோனிக்கும், சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித்திற்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாதது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்டனின் கனவு டி20 அணி :

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), காலின் முன்ரோ, விராட் கோலி, ஷேன் வாட்ஸன், கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ் பட்லர், முகமது நபி, டேவிட் வில்லே, ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா.

Tags : #CRICKET #VIRATKOHLI #MSDHONI #ROHITSHARMA #WISDEN #T20